போலீஸ் பேரிகார்டை தட்டி தூக்கியதால் தலைக்குப்புற விழுந்த குடிகாரர்..! பைக் கெத்து பரிதாபங்கள்

0 1688
போலீஸ் பேரிகார்டை தட்டி தூக்கியதால் தலைக்குப்புற விழுந்த குடிகாரர்..! பைக் கெத்து பரிதாபங்கள்

கெத்துக்காட்டுவதற்காக சாலை தடுப்புக்கம்பியில் பைக்கை மோதவிட்டு வீடியோ எடுத்த அகில பாரத இந்து மகா சபை அமைப்பின் நிர்வாகி ஒருவர், சாலையில் தடுமாறி விழுந்தார்.

பேட்டை தாதா போல பேரிகார்டை இடித்து தள்ளிக் கொண்டு பைக்கில் எண்ட்ரி கொடுத்து குப்புறடித்து விழுந்த இவர் தான் அ.பா.இ.ம.சபையின் மாவட்ட தலைவர் வாசு தேவன்..!

திருவண்ணாமலை அகில பாரத இந்து மகா சபா மாவட்ட தலைவராக உள்ள வாசுதேவன் சம்பவத்தன்று நள்ளிரவு திருவண்ணாமலை கோபுர தெருவில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை தனது இருசக்கர வாகனத்தின் மூலம் இடித்து தள்ளி வந்து கெத்து காட்ட முயன்று தலைக்குப்புற சாலையில் விழுந்தார்.

அவரது அலப்பறையை ஆதரவாளர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நிலையில் எழுந்து சென்று சாலையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு பேரிகார்டை பிடித்து நகர்த்துவது போல வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அதனை அங்கிருந்து நகர்த்த இயலாததால் கம்பியை பிடித்துக் கொண்டு முடியாமல் அப்படியே சாலையில் நின்றார்.

போதையில் வாசுதேவன் செய்த அட்ராசிட்டிகளின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments