அர்ஜென்டினாவில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து;ஓட்டம் பிடித்த பயணிகள்

0 837

அர்ஜென்டினாவில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

பியூனஸ் அயர்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற போது பேருந்தின் பின்பக்கத்தில் புகை வந்ததால், சுதாரித்த ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.

பயணிகள் கீழே இறங்கிய சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீ பரவியதோடு, எரிபொருள் கசிந்து சாலையிலும் தீ பரவியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments