பெண் விவசாயி முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 சவரன் நகை பறிப்பு.. முகவரி கேட்பது போல நடித்து கைவரிசை..!

0 1817

கடலூர் மாவட்டத்தில் பெண் விவசாயியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 சவரன் தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது.

கீழ் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான கொளஞ்சி என்பவர் வயலுக்குச் சென்று விட்டு பில்லூர் சாலை வழியாக வீட்டிற்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து முகத்தில் திடீரென மிளகாய் பொடியை தூவியதாக கூறப்படுகிறது. பின்னர் தாலிச் செயினை பறித்துக் கொண்டு அப்பெண்ணை கீழே தள்ளி விட்டு அவர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments