ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

0 1217

சம்பிரதாயமாக நடைபெற்று வந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை பிரதமர் மோடி அர்த்தமுள்ளதாக மாற்றி இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தனது கையால் ஆளுநர் தமிழிசை உணவு பரிமாறினார்.

பின்னர் பேசிய தமிழிசை, நாட்டிற்காக சேவையாற்றியவர்கள் கடந்த காலங்களில் கண்டுகொள்ளப்படவில்லை எனவும் தற்போது அவர்களை பிரதமர் போற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை அளித்த தேநீர் விருந்தை தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கனித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments