காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கார் திருட்டு: இளைஞர் கைது

சென்னையில், குடிபோதையில் ஓட்டியதற்காக பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது காரை மாற்றுச் சாவி பயன்படுத்தி ஓட்டிச் சென்றவர் கைது செய்யப்பட்டார்.
வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த, நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீசார், இளைஞர் ஒருவர் மதுபோதையில் ஓட்டி வந்த மாருதி காரை பறிமுதல் செய்தனர்.
அந்த காரை காவல்நிலையத்தில் நிறுத்திய போலீஸார், அபராதம் செலுத்தி விட்டு எடுத்துக் கொள்ளும்படி கூறி இளைஞரை அனுப்பி வைத்தனர்.
வாகன தணிக்கையை முடித்து விட்டு காவல் நிலையம் வந்து பார்த்த போது கார் காணாமல் போயிருந்ததால் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த இளைஞர் மாற்றுச்சாவி மூலமாக காரை அங்கிருந்து ஓட்டிச் சென்றது தெரிய வந்தது.
இதனைடுத்து, திருட்டு வழக்குப்பதிவு செய்த போலீஸார், சூளைமேட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அருண் கல்யாணை கைது செய்து காரை மீட்டனர்.
Comments