மின்கம்பிகளில் டிப்பர் லாரி டிரெய்லர் சிக்கி இழுத்ததில் முறிந்து விழுந்த கம்பங்கள் .. 15 கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்ததால் மின்சேவை துண்டிப்பு.. !!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே நெடுஞ்சாலைப் பணிக்காக மணலை ஏற்றிச் சென்ற ஹைட்ராலிக் டிப்பர் லாரி, மணலை இறக்கிய பின்னர், டிரெய்லரை இறக்காமல் அப்படியே சென்றதால், அது மின்கம்பிகளில் சிக்கி இழுத்ததில், அடுத்தடுத்து 15 கம்பங்கள் முறிந்து விழுந்தன.
மின்கம்பிகள் அறுபட்டவுடன் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. என்றாலும், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில், ஆம்னி வேன் ஒன்றும், பைக் ஒன்றும் சேதமடைந்தன. இருவர் படுகாயமடைந்தனர்.
அங்குள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்புத் துண்டிக்கப் பட்டுள்ளது. மீண்டும் மின்சாரம் வருவதற்கு 5 நாட்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments