சிம்லா அருகே உள்ள மலைப்பாதையில் தறிகெட்டு தாறுமாறாக ஓடிய சரக்குலாரி மோதி 4 கார்கள் நசுங்கி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

0 830

இமாச்சலப் பிரதேசம் சிம்லா அருகே மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஒன்று திடீரென சாய்ந்தது.

ஒருபக்கம் சாய்ந்தபடி சாலையில் சென்ற அந்த லாரி அங்கு நின்றிருந்த 4 கார்கள் மீது மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. அதிரவைக்கும் இந்த விபத்தின் கண்காணிப்பு கேமரா காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்

மூன்று கார்கள் நசுங்கிய நிலையில் நான்காவது கார் சரக்குலாரி அடியில் சிக்கிக் கொண்டது. ஜேசிபிஇயந்திரம் மூலம் சரக்குலாரி அகற்றப்பட்ட போதும் இந்த கோரவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சரக்குலாரியில் பிரேக் செயல்படாததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments