20 ஏக்கரில் சோலார் மின் நிலையம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்.. !!

20 ஏக்கரில் சோலார் மின் நிலையம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் தற்போது விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த தடங்களில் மொத்தம் 40 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் சுரங்கத்தில் 20 நிலையங்களும், தரைக்கு மேல் 20 நிலையங்களும் உள்ளன.
இந்த ரயில் நிலையங்களுக்கு தேவையான மின்சாரத்தை, என்.எல்.சி.மற்றும் மின்சார வாரியத்திடம் இருந்து பெறப்பட்டு வருகிறது.
அத்துடன், மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகள், அலுவலக இடங்கள் என வாய்ப்புள்ள இடங்களில் சோலார் தகடுகள் வைத்து, 5 முதல் 6 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மேலும், கோயம்பேடு, அசோக் பில்லர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் 20 ஏக்கர் இடங்களை அடையாளம் கண்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அங்கெல்லாம் தகடுகள் அமைத்து சோலார் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
Comments