மக்களாட்சியின் கருப்பு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சி போல தரம் குறைக்கும் டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் வகையில் இந்த மசோதா இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துவோர் மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது, தமக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments