சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 126 கட்டடங்கள் இடிந்து சேதம்

சீனாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 21 பேர் காயமடைந்தனர்.
நேற்று ஆப்கானிஸ்தான், காஷ்மீர், டெல்லி போன்ற இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் அண்டை நாடான சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் அதிகாலை இரண்டரை மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 புள்ளி 5 என பதிவாகியுள்ளது. 126 கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதில் சிக்கி 21 பேர் காயமடைந்தனர்.
Comments