மக்களே நல்லா பார்த்துக்கங்க.. எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.. திமுக கவுன்சிலர் வாக்குவாதம்..! அப்போ ரூ 1.76 கோடி.. புகையா..?

0 4487

திண்டுக்கல் மாநகராட்சிகுட்பட்ட பகுதியில் நன்றாக உள்ள கான்கிரீட் சாலை மீது  ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் , தனக்கு தெரியாமல் தரமற்ற முறையில் புதிதாக கான்கிரீட் சாலை அமைப்பதாக கூறி பொதுமக்கள் முன்னிலையில் திமுக கவுன்சிலர் ஒருவர் ஒப்பந்ததாரருடன் வாக்குவாதம் செய்ததால் பணி நிறுத்தப்பட்டது

திண்டுக்கல் மாநகராட்சிகுட்பட்ட வார்டுகளில் சரியில்லாத சாலைகள் பல இருக்க, 18 வது வார்டில் நன்றாக இருக்கும் மேடான கான்கிரீட் சாலை மீது கம்பிகள் ஏதும் இல்லாமல் கான்கிரீட் கலவையை மட்டும் கொட்டி புதிதாக சாலை அமைக்கும் பணியை நிறுத்தச்சொல்லி ஒப்பந்ததாரரிடம் , 18 வது வார்டு திமுக கவுன்சிலர் சாதிக் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் தான் இவை..!

திண்டுக்கல் மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த இளமதி ஜோதி பிரகாஷ் , துணை மேயராக ராஜப்பா உள்ளனர். பெரும்பாலும் வாக்கிங் செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் 18 வது வார்டுக்குட்பட்ட ரவுண்ட் ரோடு பகுதியில் சுமார் ஒரு கோடியே 76 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய சாலை பணியை நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 5ஆம் தேதி தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்த போது கவுன்சிலர் சாதிக்கும் உடன் இருந்ததாக கூறப்படுகின்றது

புதிய சாலை அமைக்கப்படுவதை கண்காணிக்க வேண்டிய மாநகராட்சி பொறியாளர் வராதது ஏன் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியதும், இதோ அவர்கள் வருகிறார்கள் என்றார் கவுன்சிலர் சாதிக்

இதற்கிடையே ஒப்பந்ததாரரை கட்சிக்காரன் என்று கவுன்சிலர் சொல்ல ஆதாரத்தை காட்டச்சொன்னதால் மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் , ஒப்பந்ததாரரை அழைத்து பணியை நிறுத்திவிட்டு மாநகராட்சிக்கு சென்று பேசி தீர்த்துக்கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தார்

சாலை நன்றாக இருக்கும் போது புதிய சாலை ஏன் ? என்று மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரிடம் கேட்டபொழுது, அரசு ஒதுக்கிய நிதி இந்த சாலைக்கானது என்பதால், அங்கு புதிய சாலை அமைக்கப்படுவதாக தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments