கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவலரிடம் மது போதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி கைது..!

சென்னை ராமாபுரத்தில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என திமுக கவுன்சிலர் ராஜி என்பவரும் முன்னாள் கவுன்சிலர் சண்முகம் என்பவரும் காவல் நிலையம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதன்பேரில் சம்பந்தப்பட்ட பெண் காவலர் புகாரளிக்காமல் பின் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
எனினும் சம்பவ இடத்திலிருந்த உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments