பேருந்து ஓட்டுநர் கண் அயர்ந்ததால் காஞ்சிபுரம் அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்து..

காஞ்சிபுரம் அருகே வெள்ளைகேட் பகுதியில் லாரி மீது பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதி 15 பெண்கள் உள்ளிட்ட 24 பேர் காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து மேல்மலையனூர் கோயில் நோக்கி வந்த அந்த சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பேருந்தின் முன்பகுதி நொறுங்கியதில் ஓட்டுநர் பிரசாந்த் படுகாயமடைந்தார்.
Comments