மெக்சிகோவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் பலி.. விபத்துக்குள்ளான பேருந்தில் 6 இந்தியர்கள் பயணித்ததாக தகவல்.. !!

0 650

மெக்சிகோவில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் பயணித்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு எல்லை நகரமான டிஜுவானா நோக்கிச் சென்ற பேருந்தில் 6 இந்தியர்கள்,  டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் என 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

பர்ரான்கா பிளாங்கா எனும் பகுதியில் வந்த போது பேருந்து, சுமார் 164 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 17 பேர் உயிரிழந்ததோடு 22 பேர் காயமடைந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments