காவிரியிலிருந்து உரிய நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!

காவிரியில் உரிய நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் குறுவை நெற்பயிரைக் காப்பாற்றிடவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார்.
மாதாந்திர அட்டவணைப்படி பிலிகுண்டுலுவில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாகவும், அதன்படி, 40 புள்ளி 4 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், 11 புள்ளி 6 டி.எம்.சி. மட்டுமே வந்துள்ளதாகவும், கர்நாடகா அரசு உத்தரவை முழுமையாக மதிக்கவில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் சுமார் 80 சதவீதம் நிரம்பியுள்ள போதிலும் உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Comments