சிறையில் இருக்க வேண்டிய ரகுபதி சிறைத்துறைக்கு அமைச்சராக இருப்பது வேதனை - பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை

0 1335

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் இருக்க வேண்டிய ரகுபதி சிறைத்துறைக்கு அமைச்சராக இருப்பது வேதனையாக உள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட அரிமளம் விளக்கு பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இலங்கைத் தமிழர்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட பிரதமர் மோடியால் மட்டுமே ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலைக்கு பா.ஜ.க. தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தும் மலர்கள் தூவியும் வரவேற்பு அளித்தனர். ஆர்வத்துடன் வந்தவர்களுடன் அண்ணாமலை கைக்குலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments