சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
மனைவிக்கு நாளை வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!
சென்னை அடுத்த ஆவடி அருகே மனைவிக்கு நாளை வளைகாப்பு நடைபெற உள்ள நிலையில் கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கொடுங்கையூரை சேர்ந்த தினேஷ் என்பவர் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே இயங்கும் கழிவுநீர் அகற்றும் சுத்திகரிப்பு நிலையத்தில் மிஷின் ஆப்ரேட்டராக கடந்த நான்கு ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
இங்கு மின்சார கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தினேஷ் அலுவலகத்தில், கீழே கிடந்த மின்சார வயரை எடுத்த போது,எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது மனைவி சவுமியாவுக்கு நாளை வளைகாப்பு நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments