இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அண்ணாமலை பேச்சு..!

இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கியில் நடைபயணத்தை தொடர்ந்த அவர், ஆயிரம் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பாஸ் புக் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
அறந்தாங்கியில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசினால் 32 ஆயிரம் சிறுகுறு தொழில்கள் மூலம் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்த பிரதமர் தேசிய ஊரக வேலை திட்டத்தைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, காலையில் எழுந்ததும் திருக்குறள் படிப்பதாக பிரதமரே கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
Comments