காரில் வந்தவர்களை அரிவாளால் தாக்கிவிட்டு பச்சை மரகதக் கல் கொள்ளை.. காவல் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பிய 3 பேர் சிக்கினர்.. !!

திண்டுக்கல் அருகே காரில் வந்தவர்களைத் தாக்கி 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பச்சை மரகதக் கல் கொள்ளையடிக்கப்பட்டது.
மதுரை விரகனூரைச் சேர்ந்த அழகர், சிவகங்கையில் உள்ள அரசுப் பள்ளியில் உதவியாளராக வேலைப் பார்த்து வருகிறார்.
அவர் தன்னிடமிருந்த 2 பச்சை மரகதக் கல்லை விற்க, தனது நண்பர் கண்ணன் மற்றும் ராமகிருஷ்ணன், அழகர் மணிகண்டன் என்ற புரோக்கர்களுடன் காரில் கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பாலம்-ராஜாக்காபட்டி அருகே, தனக்கு களைப்பாக இருப்பதாகக் கூறி அழகர் மணிகண்டன் காரை நிறுத்தியுள்ளார்.
அப்போது அவர்களுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த காரில் இருந்து இறங்கிவந்த 4 பேர் அழகரையும், கண்ணனையும் அரிவாள் மற்றும் இரும்பு ராடால் தாக்கிவிட்டு மரகதக்கல்லை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் இருவரையும் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் விட்டுவிட்டு, அவர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்தப் புகாரில் ராமகிருஷ்ணன், அழகர் மணிகண்டன் மற்றும் அவர்களுடன் இருந்த தினேஷ் பாண்டி ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸார், தப்பியோடிய மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
Comments