ஆக்ஸிஜன் மாஸ்க்குக்கு பதில் 'டீ கப்' பயன்படுத்தப்பட்டதா..? சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு

0 2630

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் நெபுலைசர் சிகிச்சைக்கு தேவையான உபகரணம் இல்லாமல் டீ குடிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் கப்பை பயன்படுத்தி சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை வற்புறுத்தியதன் பேரில் அவர் கொடுத்த காகிதக் கப்பை செவிலியர்கள் பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், எதுவாக இருந்தாலும் இத்தகைய சம்பவம் தவறானது என்பதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments