பள்ளிச்சிறுமியின் குடிநீர் பாட்டிலில் மாணவர்கள் சிலர் சிறுநீர் கழித்ததால் வன்முறை..! கடைகள், வாகனங்கள் சூறை..

ராஜஸ்தானில் உள்ள பில்வாரா மாவட்டத்தில் பள்ளிச் சிறுமியின் குடிநீர் பாட்டிலில் சிறுவர்கள் சிலர் சிறுநீர் கழித்ததாக, இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
லுஹாரியா கிராம அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியை, 2 மாணவர்கள் சேர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், புத்தகப் பையில் காதல் கடிதத்தை வைத்ததாகவும் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக பள்ளியில் போலீசார் விசாரிக்கச் சென்றபோது மோதல் வெடித்து கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன.
வன்முறை தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 13, பதினான்கு வயதான அந்த இரண்டு சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், சிறுநீர் கழிக்கப்பட்டதாக கூறப்படும் பாட்டிலை ஆய்வுக்கு அனுப்பி இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மேலும் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Comments