மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள ரியாஸ் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை.. !!

0 7251

மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள ரியாஸ் ஹோட்டலில் கடந்த 22ஆம் தேதி சிக்கன் சாப்பிட்ட இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா தனக்கும், தனது குழந்தைகளுக்கும் வயிற்று வலி ஏற்பட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குளிர் சாதன பெட்டியிலிருந்த 3 கிலோ பழைய சிக்கனை கொட்டி அழித்தனர்.

சமையலறை, காய்கறிகள் சேமிக்கும் இடம் மற்றும் குளிர்சாதனப்பெட்டி சுகாதாரமாக இல்லை என கூறிய அதிகாரிகள் அவற்றை முறையாக பராமரிக்குமாறு எச்சரித்து நோட்டீஸ் வழங்கினர். சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளையும் பரிசோதனைக்காக  எடுத்துச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments