உயரமான கட்டடங்களில் ஏறி சாகசம் செய்துவந்தவர் உயிரிழப்பு.. 68-வது மாடியில் ஏறிக் கொண்டிருந்தபோது கால் தவறி விழுந்து உயிரிழப்பு.. !!

0 1814

உயரமான கட்டடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு சாகசப் பிரியர், 68 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

30 வயதான ரெமி லுசிடி என்னும் அவர், சீனாவில் உள்ள ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடியில் ஏறியபோது தவறி விழுந்தார்.

தனது நண்பரை காண வந்ததாகக் கூறி அவர் அந்த அடுக்குமாடிக்குள் நுழைந்திருக்கிறார். 68 ஆவது மாடியை அடைந்தபோது, கதவைத் தட்டி அங்கிருந்த பணிப் பெண்ணிடம் உதவி கோரியுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணோ அச்சத்தில் உதவ மறுத்து காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டார். அதற்குள் ரெமி லுசிடி கால் தவறி கீழே விழுந்து மரணம் அடைந்ததாக தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments