''திமுக மீது பொத்தாம் பொதுவாக சேற்றை வாரி இறைத்திருக்கிறார் அமித்ஷா..'' - துரைமுருகன்...!

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த கட்சி என்ற அமித்ஷாவின் கருத்து, அவரது தரத்துக்கு உகந்தது அல்ல என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ராணிப்பேட்டை பாரதிநகரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் மீது பொத்தாம் பொதுவாக அமித்ஷா சேற்றை வாரி இறைத்திருப்பதாகக் கூறிய துரைமுருகன், பாஜகவில் எத்தனை பேர் ஊழல் செய்திருக்கிறார்கள் என பட்டியல் போட்டுத் தர தயாராக இருப்பதாகவும் கூறினார்.
Comments