2 வது முயற்சியில் வென்றது எப்படி ? நீட் எளிதாக மதிப்பெண் பெறலாம்..! நம்பிக்கை சொல்லும் மாணவி

0 8009

பெரம்பலூரைச் சேர்ந்த ஏழை கூலித்தொழிலாளியின் மகளுக்கு, நீட் தேர்வு மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்படிப்பில் இடம் கிடைத்துள்ளது. 

இவனல்லாம் எங்க புள்ளய படிக்க வைக்க போறான்னு சொன்னவர்களின் வாயடைக்கும் விதமாக மகளை மருத்துவ படிப்பில் சேர்த்து வியக்க வைத்த ஏழை கூலித்தொழிலாளி இவர் தான்..!

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான சுப்பிரமணியனின் மகள் காயத்திரி.

இவர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து முதல் முறை நீட் தேர்வில் 157 மதிப்பெண் எடுத்த நிலையில் , மீண்டும் இந்த முறை 6 மாதம் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று தகுதி வாய்ந்த மதிப்பெண் பெற்று , கலந்தாய்வில் பங்கேற்ற காயத்திரிக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரியலூர் அரசு மருத்துவகல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது .

கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்குமாறு என்னுடைய தாவரவியல் ஆசிரியர் கூறியதாகவும், தனது ஆசிரியர்தான் அருகில் இருக்கும் கோச்சிங் சென்டரில் சேர்த்து விட்டதாகவும் தெரிவித்த மாணவி காயத்திரி, நிறைய மாதிரி வினாத்தாள்களில் பயிற்சி எடுத்ததால் நீட் தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தார்

நான் என் மகளை டாக்டருக்கு படிக்க வைப்பேன் என என் சொந்தக்காரர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விவசாயத்தில் வருவாய் இல்லாததால் கூலி வேலைக்கு சென்று மகளைப் படிக்க வைத்தேன். மகள் மருத்துவரானதில் ஒரு தந்தையாக எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றார் சுப்பிரமணியன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments