கால்கள் செயலிழந்தும் சக்கர நாற்காலியில் சென்று "10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்"

கன்னியாகுமரி மாவட்டம் தல்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மூளை நரம்பியல் மருத்துவர் 70 வயதான ஆறுமுகம், விஷக்காய்ச்சலால் தனது கால்கள் செயலிழந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் சுழன்றபடி 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.
கடந்த 30 வருடங்களாக பொது மருத்துவம், மூளை நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கு 10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் ஆறுமுகம், ஏழைகளை அவரது மருத்துவமனையிலேயே அனுமதித்து உணவு, மருந்து, மாத்திரைகள் வழங்கி இலவச சிகிச்சையும் அளித்து வருகிறார்.
தனது தந்தையின் ஆசைக்கு இணங்க 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்ப்பதாக கூறும் மருத்துவர் ஆறுமுகம், நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் நீங்க நல்லா இருக்கணும் டாக்டர் என்று வாழ்த்துவது தான் தனக்கு வருமானம் என்றார்.
Comments