மணிப்பூர் கொடூரம் தொடர்பாக 18 வயதிற்குட்பட்ட நபர் உள்பட 7 பேர் கைது...!

0 1480

மணிப்பூரில் பழங்குடியினப் பெண்களுக்கு கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 18 வயதிற்குட்பட்ட நபர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த மே 4ஆம் தேதி நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோ அண்மையில் பரவிய நிலையில் அம்மாநிலத்தில் பதற்றம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய எஞ்சிய நபர்கள் குறித்தும், வீடியோ எங்கிருந்து பதிவேற்றப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

பதற்றத்தை தணிக்க காவல்துறையினரும், ராணுவத்தினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மியான்மரில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை மணிப்பூரில் நடந்ததுபோல் பொய் செய்தி பரப்பி மேலும் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்களை ஐ.பி. முகவரியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments