திசையன்விளையில் 19 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை... மாற்று சமூக பெண்ணை காதலித்ததால் கொலையா என போலீஸ் விசாரணை

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மாற்று சமூக பெண்ணை காதலித்த 19 வயது இளைஞர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அப்புவிளை ஊராட்சியை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான கன்னியப்பன் என்பவரின் மகன் முத்தையா தன்னுடன் பணி புரியும் இட்டமொழியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
முத்தையா வேறு சமூகம் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டிற்கு வந்த காதலியை, இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று இட்டமொழியில் விட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இரவு எட்டு மணி அளவில் நண்பரை பார்ப்பதாக கூறி வெளியே சென்ற முத்தையா, வெகுநேரமாகியும் திரும்பாததால், அவரது சகோதரர்கள் தேடியபோது, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கழுத்து, முதுகு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த காவல்துறையினர் காதல் விவகாரத்தில் நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Comments