அரசுப்பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்... பைக் பரிசளித்த முன்னாள் மாணவர்கள்

0 19975

திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள் இருசக்கர வாகனம் ஒன்றையையும் ஆசிரியருக்கு பரிசளித்தனர்.

1988 ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக இருந்தபோது பணியில் சேர்ந்த ராமன், 2007 ஆம் ஆண்டு உயர்நிலையாகத் தரம் உயர்த்தப்பட்ட அந்த பள்ளியிலிருந்து நேற்றோடு பணி ஓய்வு பெற்றார்.

அதனை முன்கூட்டியே தெரிந்துகொண்ட முன்னாள் மாணவர்கள், தற்போது படித்துவரும் மாணவர்களை ஒருங்கிணைத்து ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்தினர்..

ஆசிரியர் ராமன் கண்டிப்புடன் நடந்துகொண்டு அறிவுப்பாதையை காட்டியதால் தான் உயர்ந்த நிலையை அடைய முடிந்ததாக முன்னாள் மாணவர்கள் பள்ளி நாட்களை மேடையில் நினைவுகூர்ந்தனர். மாணவர்கள் பொழிந்த அன்பு மழையால் ஆசிரியர் ராமன் மேடையிலேயே கண்கலங்கினார்.

அவருக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான ஹீரோ பேஷன் புரோ பைக்கையும் முன்னாள் மாணவர்கள் பரிசளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments