சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
ஹைதராபாத்தில் போலி கம்பெனிகள் மூலமாக துபாய் மற்றும் சீனாவுக்கு பணம் அனுப்பி வந்த 9 பேர் கைது

ஹைதராபாதில் போலி கம்பெனிகள் மூலமாக துபாய் மற்றும் சீனாவுக்கு பணம் அனுப்பி வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை அகமதாபாத் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த அவர்கள், வெளிநாட்டில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை ஏமாற்றி சுமார் 712 கோடி ரூபாய்க்கு மோசடி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
1000 ரூபாய் முதலீடு செய்தால் 866 ரூபாய் லாபம் கிடைக்கும் என முதலீட்டாளர்களைக் கவர்ந்த இவர்கள் லட்சக்கணக்கில் பலரை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இந்தப் பணம் போலி கம்பெனிகளின் பெயரால் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Comments