மின்சார ஊழியர்களின் அலட்சியபோக்கால் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு....!

மரக்காணம் அருகே உயரே வளர்ந்த தென்னை மரக்கீற்றில் மின்சார கம்பி உரசியிருப்பது தெரியாமல் தாழ்வாக தொங்கிய தென்னங்கீற்றை பிடித்த விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நடுக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது விவசாய நிலத்திற்கு செல்வதற்காக ஜெயபால் என்பவரின் தென்னந்தோப்பு வழியாக சென்றபோது, மின்கம்பி உரசிய தென்னை மரத்திலிருந்து தாழ்வாக தொங்கிய கீற்றை பிடித்தபோது மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்கம்பியில் உரசுவதால் தென்னைமர கீற்றுகளை அகற்ற கோரி நிலத்தின் உரிமையாளர் ஜெயபால் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் காட்டியதால் விபத்து ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனார்.
இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments