மெக்சிகோ நகரங்களை தாக்கிய மணல் புயல்.. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு.. !!

மெக்சிகோவின் சோனோரா மாகாணத்தை மணல் புயல் தாக்கியது. கடற்கரை நகரான சான் கார்லோஸை தாக்கிய மணல் புயலால் நகரின் பல்வேறு இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாலையில் சாய்ந்தன.
மணல் புயலால் மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், ஆனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் சோனோரா மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments