தி.மு.க. பிரமுகரை ஓடஓட விரட்டி வெட்டிய மர்ம நபர்கள்.. படப்பையில் பதற்றம்..!

0 3768

சென்னையை அடுத்த படப்பை அருகே தி.மு.க. பிரமுகரை அவரது வீட்டின் அருகே ஓடஓட சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆதனூரைச் சேர்ந்த சக்கரபாணி என்ற அவர், அதே பகுதியில் மணல், ஜல்லி போன்றவற்றை விற்பனை செய்து வருவதோடு, ஜே.சி.பி. இயந்திரம், லாரி உள்ளிட்டவற்றை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே போனில் பேசிக் கொண்டிருந்த சக்கரபாணியை மர்மநபர்கள் 4 பேர் பட்டாக் கத்தியால் தாக்க முற்பட்டுள்ளனர். அப்போது தப்பியோட முயன்ற அவரை, மர்ம நபர்கள் துரத்தி சென்று கை, கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த சக்கரபாணி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

ஆதனூர் அருகே மாடம்பாக்கத்தில் ஊராட்சி மன்றத் தலைவரை கடந்த ஆண்டு கொலை செய்த ரவுடி கும்பல், வெளியே வந்துள்ளதாகவும், அந்த கும்பல் சக்கரபாணியிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தராததால் தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments