சென்னையில் முதன்முறையாக இரும்பு தூண்கள் மூலம் மேம்பாலம் அமைப்பு.. !!

0 14948

சென்னையில் முதன்முறையாக 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெடிமேட் இரும்பு தூண்களைக் கொண்டு புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தியாகராய நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி நகர் 1வது பிரதான சாலை இடையே 1.2 கிலோ மீட்டர் நீளத்தில், 55 இரும்பு தூண்களுடன் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

ஏற்கனவே உஸ்மான் சாலையில் உள்ள 747 மீட்டர் நீளம் கொண்ட பழைய மேம்பாலத்தின் சாய் தளத்தை தகர்த்து, புதிதாக அமையும் இந்த இரும்பு தூண் பாலத்தை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சேலத்தில் உள்ள இரும்பு ஆலையில் செய்யப்பட்ட இந்த இரும்பு தூண்கள், கான்கிரீட் போடப்பட்டு தரைப்பகுதியில் பொருத்தப்பட்டு வருகிறது.

மேம்பாலத்தின் மேல் வாகனங்கள் செல்லும் கிடைமட்ட பகுதி வழக்கம் போல் கான்கிரீட் மூலம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கன்னியாகுமரியில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் இது போன்ற இரும்பு தூண் பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments