வயதான தம்பதியை பராமரிக்கத் தவறிய வளர்ப்புப் பிள்ளையிடம் இருந்து சொத்து மீட்பு.. !!

0 3530

கன்னியாகுமரியில் வயதான தம்பதியைப் பராமரிக்கத் தவறியதால், வளர்ப்புப் பிள்ளையிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தை சம்மந்தப்பட்ட முதியவரிடம் அதிகாரிகள் மீட்டுக் கொடுத்துள்ளனர்.

நெய்யூரைச் சேர்ந்த 85 வயதான மரியலூயிஸ் - 78 வயது அசுந்தா மேரி தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் அண்ணன் மகன் ரைமண்ட் வியாலின்ஸ் என்பவரை தனது பிள்ளை போல மரிய லூயிஸ் வளர்த்து வந்ததாகவும், கடைசி வரை தங்களை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தப்படி 2006 ஆம் ஆண்டு தமது சொத்தை எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரைமண்ட் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டதால் அவரது மனைவி பராமரித்து வந்துள்ளார்.

ஆனால், அவர் முறையாக கவனிக்கவில்லை என்று மரிய லூயிஸ் அளித்த புகாரின்பேரில், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக் விசாரித்து, ரைமண்ட் பெயரில் இருந்த ஆவணங்களை ரத்து செய்து, சொத்தை ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments