கென்யாவில் விலைவாசி உயர்வு, வரியேற்றத்தைக் கண்டித்துப் போராட்டம்.. !!

கென்யாவில் விலைவாசி உயர்வு மற்றும் வரியேற்றத்தைக் கண்டித்து தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்ததையடுத்து, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.
சில இடங்களில் சாலைகளின் குறுக்கே போராட்டக்காரர்கள் டயர்களை போட்டு தீயிட்டு கொளுத்தியதால் போக்குவரத்து தடைபட்டது. இதனிடையே, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்.
Comments