கஞ்சா வைத்திருந்ததாக பிரபல அமெரிக்க மாடல் அழகி நண்பருடன் விமான நிலையத்தில் வைத்து கைது.. !!

0 1986

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஐகி ஹடிட் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

ஐகி ஹடிட், கடந்த ஜூலை 10ம் தேதி தனது நண்பருடன் கரீபியன் கடலில் உள்ள கேமன் தீவுகளுக்கு தனியார் விமானத்தில் சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் அவரது உடைமைகள் சோதனை செய்யப்பட்ட போது, கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதால் ஐகி ஹடிட்டும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, கேமன் தீவு மதிப்பில் ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஐகி ஹடிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் கடற்கரையில் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு, "எல்லாம் நன்றாக இருக்கிறது... நன்றாக முடிந்தது" என பதிவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments