மதுராந்தகம் அருகே ஷேர் ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து - பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர் என 12 பேர் படுகாயம்

0 1621
மதுராந்தகம் அருகே ஷேர் ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து - பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர் என 12 பேர் படுகாயம்

மதுராந்தகம் அருகே ஷேர் ஆட்டோ மீது, பின்னால் அதிவேகத்தில் வந்த கார் மோதியல், 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

சித்தால மங்கலத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகள், ஒரு ஆசிரியர் உட்பட 12 பேருடன் அந்த ஆட்டோ சென்று கொண்டிருந்தது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலவலம் பேட்டை என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோர பள்ளத்தில் இறங்கி சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரும், 6 மாணவர்களும் மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டனர். விபத்து பற்றி கார் ஓட்டுநரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments