ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மூலம் ரூ.100 கோடி மோசடி புகார்.. உறவினரை கடத்தி பணம் பறிக்க முயன்ற 5பேர் கைது..!

0 1197

வேலூரை தலைமை அலுவலமாக கொண்டு இயங்கிய ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மூலம் 100 கோடி ரூபாய் மோசடி செய்த உறவினரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 5பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிறுவனத்தின் ஓசூர் கிளையில் பணிபுரிந்த ராஜேஷ் என்பவர் ஏராளமானோரிடம் 100 கோடி ரூபாய்க்கு முதலீடு பணத்தை பெற்று மோசடி செய்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.

அவருக்கு நண்பர்களான கோபி மற்றும் முருகன் ஆகியோர் தங்களுக்குத் தெரிந்தவர்களிடத்தில் பணம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மட்டும் தலைமறைவாக இருக்கும் ராஜேஷ் ஆஜராகி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தெரிந்து கொண்ட கோபி , முருகன் மற்றும் நண்பர்கள் புதுச்சத்திரத்தில் காரில் சென்ற ராஜேசை மடக்கி காருடன் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் வெள்ளவேடு போலீசார் விரைந்து செயல்பட்டு கடத்தல்காரர்கள் 5பேரையும் பிடித்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments