தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 1,44,000 கிலோ போதைப்பொருட்கள் அமித் ஷா முன்னிலையில் அழிப்பு
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 44 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று அழிக்கப்பட்டன.
டெல்லியில் அமித் ஷா தலைமையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. இதில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டதை காணொலி வாயிலாக அவர் கண்காணித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, போதைப் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
Comments