தே.ஜ.கூ கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை டெல்லி செல்கிறார் இ.பி.எஸ்.

தேசிய ஜனநாயக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை டெல்லி செல்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 9 மணி வாக்கில் அவர் டெல்லி செல்வார் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால தொடரின் போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளை சமாளிக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு பங்களிப்பாற்றுவது என்பது குறித்தும் மக்களவை தேர்தல் வியூகம் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
Comments