மத்திய அரசின் அவசர சட்டம்... ஆம் ஆத்மி அரசின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு..!!

பெங்களூருவில் நாளை எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், டெல்லி அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற 17 கட்சிகள், மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக இணைந்து களமிறங்க முடிவெடுத்தன.
அக்கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்ந் கெஜ்ரிவால், மத்திய அரசின் அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி நிலைப்பாட்டை அறிவிக்காமல் மவுனம் காப்பதாக அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பதில் சந்தேகம் நிலவியது.
இந்நிலையில், அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் காங்கிரஸ் தெளிவாக இருப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி நாளைய கூட்டத்தில் பங்கேற்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments