வித்தியாசமான முறையில் பாண்டா கரடியின் பிறந்த நாளை கொண்டாடிய பூங்கா நிர்வாகம்...!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்த நாளை பூங்கா நிர்வாகம் வித்தியாசமாக கொண்டாடியுள்ளது.
ஜியாவோ குயிங் என்ற அந்த கரடிக்கு தற்போது 13 வயது. அதன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்ட பூங்கா நிர்வாகம், பாண்டாவுக்கு வித்தியாசமான பரிசை வழங்க முடிவு செய்தது.
அதன்படி, வைக்கோல் நிரப்பப்பட்ட சாக்குப் பை மீது நறுமண எண்ணெய்களை பூசி, கமகமவென பாண்டாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பாண்டாவும், அந்த சாக்குப் பையை முகர்ந்தபடி, வாசனையை ரசித்துக் கொண்டே புல்வெளியில் விளையாடியது பார்வையாளர்களை கவர்ந்தது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து 2017-ம் ஆண்டு பெர்லின் பூங்காவுக்கு ஜியாவோ குயிங் பாண்டா கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments