அமெரிக்க பாடகி லிசா பிரஸ்லி மரணம்.. 6 மாதங்களுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

அமெரிக்க பாடகி லிசா பிரஸ்லி எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது குடல் பகுதியில் ஏற்பட்ட உள்காயங்களால் உயிரிழந்தது 6 மாதங்களுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரபல பாடகர் எல்விஸ் பிரஸ்லியின் மகளும், மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவியுமான லிசா பிரஸ்லி கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இயற்கையாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன் அவர் பேரியாட்ரிக் (bariatric) என்றழைக்கப்படும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட போது சிறுகுடல் பகுதியில் காயம் ஏற்பட்டதும், அதை தொடர்ந்து அங்கு புதிதாக வளர்ந்த திசுக்களால் சிறுகுடலில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்புக்கு வழிவகுத்தது தற்போது வெளியாகி உள்ள மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
Comments