வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் 3 விண்கலம்

0 3442

சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சரியாக 16-வது நிமிடத்தில் சந்திரயான் - 3 விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது...

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் 25½ மணி நேர கவுன்டவுன் முடிவடைந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு, சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து கொண்டு, எல்விஎம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது..

திட்டமிடப்பட்ட ஒவ்வொரு கட்டங்களை கடந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் எல்விஎம்-3 ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் பிரிந்தது. 16ஆவது நிமிடத்தில் எல்விஎம்-3 ராக்கெட்டில் இருந்து பிரிந்த சந்திரயான் விண்கலம், புவி சுற்றுப்பாதையில் தற்போது பயணித்து வருகிறது. புரொபெல்சன் எனப்படும் உந்தவிசை கலன் இயங்க தொடங்கி, நிலவு நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.

பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் - 3 விண்கலத்தின் பயணத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்று இஸ்ரோ கூறியுள்ளது. 40 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 23 அல்லது 24ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments