ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்க - சென்னை உயர்நீதிமன்றம்..!!

ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டிய நடைமுறைகளை, அனைத்து ஊழல் வழக்குகளுக்கும் பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் 11.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை 10 லட்சத்துக்கு வாங்கிய அரசு அதிகாரி ராஜேந்திரன் என்பவரின் குடும்பத்திற்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்துசெய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், விசாரணை நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியதால் வழக்கை ரத்துசெய்ய முடியாது என கூறினார்.
அதிகாரிகள் தாக்கல் செய்யும் சொத்து விவரங்களில் குறைபாடுகள் இருந்தால், அதனை கண்டறிந்து முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அரசு ஊழியர்களின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக 24 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சட்ட மசோதாவை பரிசீலிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
Comments