அடுப்பு இல்லாமல் இயற்கையான முறையில் உணவகம்.. வாழைப்பூ வடை பாயாசத்துடன் மதிய உணவு !!

கோயம்புத்தூரில், அடுப்பு இல்லாமல் ஒரு துளி எண்ணெய் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கையான முறையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் இயங்கி வரும் படையல் அகாடமி உணவகத்தில் வாழைப்பூ வடை பாயாசத்துடன் 199 ரூபாய்க்கு முழுமையான மதிய உணவு வழங்குகின்றனர்.
அதில் சுரக்காய் சாம்பார், வெற்றிலை ரசம், கோவக்காய் குழம்பு, பொரியல், அவியல் என அனைத்தையும் அடுப்பே இல்லாமல் சமைத்து பரிமாறுகின்றனர்.
மசால் பொடி, மிளகாய் பொடி, வெங்காயம், பூண்டு, தயிர், மைதா, அஜினமோட்டோ என எதுவும் உணவகத்தில் பயன்படுத்துவதில்லை, அதற்கு மாற்றாக மிளகு, சீரகம், சோம்பு, நாட்டு சக்கரை உள்ளிட்டவற்றை பிரதானமாக பயன்படுத்துவதாக நேச்சுரல் புட் உணவக உரிமையாளர் படையல் சிவக் குமார் கூறுகிறார்.
Comments