நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதிப்பு

நடிகர் விஜய் கார் சிக்னலை மதிக்காமல் போக்குவரத்து விதி மீறியதால் போக்குவரத்து போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
நடிகர் விஜய் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவகத்தில் 234 தொகுதிகளின் பொறுப்பாளர்களை சந்தித்து பேசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்று மதியம் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் பனையூர் அலுவலகத்திற்கு நடிகர் விஜய் புறப்பட்டு சென்றார்.
அப்போது தம்மைப் பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவு கூடி விடுவார்கள் என்ற அச்சத்தில் விஜயின் கார் சாலையில் வேகமாகவும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமலும் அக்கறை ஜங்சனில் சிக்னலை மதிக்காமலும் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து விஜயின் வாகனம் சிக்னலை மீறியதாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவருக்கு செலான் அனுப்பப்பட்டுள்ளது.
அவரின் கார் வேகமாக சென்றதும் சிக்னலை மதிக்காமல் சென்றதுமான காட்சிகள் வெளியான நிலையில் அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்வதாகவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments