பறக்கும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க 17 பேர் கொண்ட சிறப்புக் குழு... வழிப்பறியில் சிக்கி பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து நடவடிக்கை...!

வழிப்பறியில் சிக்கி ஓடும் ரயிலில் இருந்து பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து இறந்ததை அடுத்து, சென்னையில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, 5 பெண் காவலர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட சிறப்புக் குழுவை, ரயில்வே பாதுகாப்புப் படை நியமித்துள்ளது.
இந்த குழு, கடற்கரை முதல் வேளச்சேரி வரை உள்ள 17 ரயில் நிலையங்களிலும், முக்கிய நேரங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் கூறியுள்ளனர்.
Comments