உத்தரகாண்டில் உருண்டோடிய மலைப்பாறைகள்.. பக்தர்களின் வாகனங்கள் மீது விழுந்ததில் 4 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாறைகள் உருண்டு வாகனங்கள் மீது விழுந்ததில் 4 பக்தர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கங்கோத்ரியில் இருந்து உத்தரகாசி நோக்கி பக்தர்களின் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த நிலையில் திடீரென மலைப்பாறைகள் உருண்டு வாகனங்கள் மீது விழுந்தன. இதில் 3 வாகனங்கள் நசுங்கியதில் வாகனங்களில் இருந்த 4 பக்தர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 6க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Comments